சார்-பதிவாளரை மிரட்டிய பத்திர எழுத்தருக்கு அபராதம்

தட்டார்மடம் அருகே சார்-பதிவாளரை மிரட்டிய பத்திர எழுத்தருக்கு கோர்ட்டில் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-05-05 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டமார்மடம் அருகே சார்-பதிவாளரை மிரட்டிய பத்திர எழுத்தருக்கு சாத்தான்குளம் கோர்ட்டில் அபராதம் விதிக்கப்பட்டது.

பத்திர எழுத்தர்

தட்டார் மடம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை விசுவாசபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ரவிச்சந்திரன். பத்திர எழுத்தர். இவர் கொம்மடிக்கோட்டை சார்-பதிவாளர் அலுவலகம் அருகே பத்திரம் எழுதும் அலுவலகம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு கொம்மட்டிக்கோட்டை சார்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்வது தொடர்பாக சார்-பதிவாளர் செசிந்தா என்பவரிடம் தகராறு செய்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

அபராதம் விதிப்பு

இதுகுறித்து கொமட்டிக்கோட்டை சார்-பதிவாளர் ஜெசிந்தா தட்டார்மடம் போலீசாரிடம் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ரவிச்சந்திரன் மீது சாத்தான்குளம் நீதிமன்றத்தில் தட்டார்மடம் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். தொடர்ந்து இவ்வழக்கு விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த சாத்தான்குளம் குற்றவியல் நீதிபதி கலையரசி ரீனா தீர்ப்பு கூறினார். அதில், பத்திர எழுத்தரான ரவிச்சந்திரனுக்கு ரூ.5ஆயிரத்து 500 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் ராஜ்மோகன் வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்