திருப்பத்தூர் மின் வாரிய அலுவலகத்தில் நெட்வொர்க் சேவை பாதிப்பால் மக்கள் அவதி
திருப்பத்தூர் மின் வாரிய அலுவலகத்தில் நெட்வொர்க் சேவை பாதிப்பால் மக்கள் அவதிப்படுகின்றனர்.;
திருப்பத்தூர்
திருப்பத்தூர் துணை மின்நிலைய அலுவலகத்தில் நேற்று காலை முதல் நெட்வொர்க் சேவை கிடைக்காத காரணத்தினால் அலுவலக பணிகளும் மின் கட்டணம் செலுத்தும் அலுவலகத்திலும் அதிக அளவில் பொதுமக்கள் காலை முதல் நீண்ட நேரம் காத்திருந்தனர். இது தொடர்பாக பொதுமக்கள் அலுவலரிடம் கேட்ட பொழுது அவர்கள் சரிவர பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது.
மேலும் இது போன்ற நெட்வொர்க் பிரச்சினையால் பொதுமக்கள் அலுவலகத்திற்கு தினமும் அலையும் நிலை ஏற்படுகிறது. இந்த காரணத்தினால் மின்கட்டணத்தை பயனாளிகள் அபராதத்துடன் கட்டும் நிலை ஏற்படுகின்றது என்று பொது மக்கள் புலம்பிச் செல்கின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.