கடலூரில் 100 டிகிரி வெயில் பொதுமக்கள் அவதி

கடலூரில் 100 டிகிரி வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.;

Update:2023-07-09 01:43 IST

கடலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. 90 டிகிரிக்கும் குறைவாக வெயில் பதிவானது. இதற்கிடையில் வெப்பச் சலனம், வங்கக்கடலில் காற்று திசை மாறுபாடு காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வந்தது. மாலை நேரத்தில் அவ்வப்போது குளிர்ந்த காற்றும் வீசியது. இதனால் பொதுமக்கள் சிரமமின்றி நடமாடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று கடலூரில் 100.4 டிகிரி வெயில் பதிவானது. இதை காலை முதலே உணர முடிந்தது. நேரம் செல்ல, செல்ல வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். ஆனால் மாலை 6 மணி அளவில் குளிர்ந்த காற்று வீசியது. சற்று நேரத்தில் பலத்த காற்றும் வீசியது. இதனால் காலையில் அவதிப்பட்ட மக்களுக்கு இந்த காற்று சற்று ஆறுதலை அளித்தது.

Tags:    

மேலும் செய்திகள்