மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

Update: 2023-05-29 18:45 GMT

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர். இதில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், வேலைவாய்ப்பு, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, வங்கிகடன் உள்பட மொத்தம் 233 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை கலெக்டர் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தவிவரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.முன்னதாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு இஸ்திரி பெட்டிகளையும், 5 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரங்களையும், தரங்கம்பாடி வட்டம், மாணிக்கபங்கு கிராமம், ஆணைக்கோவில் வடக்குத் தெருவை சேர்ந்த கலைமணி என்ற பெண்ணுக்கு கறவை மாடு வாங்குவதற்கு மாவட்ட கலெக்டரின் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.30 ஆயிரத்துக்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்டவருவாய் அலுவலர் முருகதாஸ், தனித்துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத் திட்டம்) கண்மணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி, மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்