ஊட்டியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்-கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது

ஊட்டியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்- கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது

Update: 2023-02-07 06:00 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதையடுத்து பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 133 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, துறை அலுவலர்கள், தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்க வேண்டும் எனவும், பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி கோரும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார். தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் குஞ்சப்பணை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 300 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் கம்பளி ஆடைகளையும் வழங்கினார்.முன்னதாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், போலி மதுபானங்கள் மற்றும் போதை வஸ்துகளால் ஏற்படும் தீமைக்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியினை பார்வையிட்டார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்