பெரிய மாரியம்மன் கோவில் ஆடிப்பூர திருவிழா

கிருஷ்ணகிரியில் பெரிய மாரியம்மன் கோவில் ஆடிப்பூர திருவிழா நடந்தது. இதில் பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.;

Update:2022-08-11 21:46 IST

கிருஷ்ணகிரியில் பெரிய மாரியம்மன் கோவில் ஆடிப்பூர திருவிழா நடந்தது. இதில் பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.கிருஷ்ணகிரியில் பெரிய மாரியம்மன் கோவில் ஆடிப்பூர திருவிழா நடந்தது. இதில் பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.

மாரியம்மன் கோவில்

கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 8-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

9-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், இரவு 9 மணிக்கு கருமாரியம்மன் பிறப்பு நாடகமும் நடந்தது. 10-ந் தேதி மாலை 5 மணிக்கு அம்மன் ஊர்வலமும், இரவு 9 மணிக்கு காலகனி சூளகனி நாடகமும் நடந்தது.

பால் குடம் ஊர்வலம்

நேற்று காலை 6 மணி முதல் 12 மணி வரை கீழ்புதூர், கட்டிகானப்பள்ளி, மேல்புதூர், பெருமாள் நகர், மோட்டூர், லைன்கொள்ளை, மேல்சோமார்பேட்டை, கீழ் சோமார்பேட்டை, நாயுடு தெரு, ஆனந்த நகர், எம்.ஜி.ஆர். நகர், புதிய வீட்டு வசதி வாரியம், ராஜாஜி நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவிலில் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு அம்மன் ஊர்வலமும், இரவு 9 மணிக்கு வண்ணிய புராணம் நாடகமும் நடந்தது.

இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றுதலும், மாலை 6 மணிக்கு அம்மன் ஊர்வலமும், இரவு 9 மணிக்கு அர்ஜூனன் தபசு நாடகமும் நடைபெற உள்ளது.

சிறப்பு அலங்காரம்

நாளை (சனிக்கிழமை) காலை பொங்கல் வைத்தலும், இரவு கொரத்திகனி நாடகமும் நடைபெற உள்ளது. வருகிற 14-ந் தேதி கங்கையில் புனித நீராடி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஊர்வலம் வருதல் மற்றும் 12 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கை ஊர்வலமாக எடுத்தல், சூலம் போடுதல், தீ மிதித்தல் ஆகியவை நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்