தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு: அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்டு
தமிழ்நாட்டில் முகக்கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை அபராதத்துடன் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.;
கோப்புப்படம்
சென்னை,
தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் என்று சுகாதாரத்துறை அரசானை பிறப்பித்தது. இந்த அரசானையை ரத்துசெய்யவேண்டும் என்று வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் போதிய ஆய்வுகள் எதுவும் இன்றி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன், மனுதாக்கல் செய்தவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.