வழிபாட்டு தல கட்டுமான பணியை நிறுத்தக்கோரி மனு
சலவன்பேட்டையில் வழிபாட்டு தல கட்டுமான பணியை நிறுத்தக்கோரி மனு அளிக்கப்பட்டது.;
வேலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்திலிடம், இந்து முன்னணி மாநகர செயலாளர் ஆதிமோகன் மற்றும் இந்து முன்னணியினர், பொதுமக்கள் க்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
வேலூர் சலவன்பேட்டை பாரதியார் நகரில் கருமாரியம்மன் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளது. அந்தப் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் வேற்று மதத்தின் வழிபாட்டு தலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த கட்டிட பணியை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.