நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில், நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிற இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.;

Update:2022-06-15 21:02 IST

நாளை மின்சாரம் நிறுத்தம்

வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி ஆர்.கோம்பை, புளியம்பட்டி, வடுகம்பாடி, குஜிலியம்பாறை, ஆர்.புதுக்கோட்டை, பில்லமநாயக்கன்பட்டி, கோவிலூர், உசிலம்பட்டி, குளத்துப்பட்டி பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று கோவிலூர் உதவி செயற்பொறியாளர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதேபோல் வள்ளிபட்டி, சத்திரப்பட்டி, சின்னுலுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடக்கிறது. இதையொட்டி அம்மாபட்டி, ராமகிரி, மல்லப்புரம், குஜிலியம்பாறை, இலுப்பபட்டி, புளியம்பட்டி, சி.சி.குவாரி, உக்குவார்பட்டி, வாணிக்கரை, கூம்பூர், பள்ளபட்டி, அழகாபுரி, சத்திரப்பட்டி, சேர்வைகரன்பட்டி, கரிக்காலி, பல்லாநத்தம், தாதநாயக்கனூர், இடையபட்டி, காளப்பட்டி, பூசாரிபட்டி, திருமக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை குஜிலியம்பாறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிச்சை தெரிவித்துள்ளார்.

பழனி, பித்தளைப்பட்டி

பித்தளைப்பட்டி, கீழக்கோட்டை துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பித்தளைப்பட்டி, மைக்கேல்பட்டி, சூசைப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, எல்லைப்பட்டி, பூத்தாம்பட்டி, செட்டியப்பட்டி, கல்லுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று சின்னாளப்பட்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி துணை மின்நிலையம் ரவிமங்கலம் பீடரில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி ரவிமங்கலம், பொந்துப்புளி, சின்னக்காந்திபுரம், ஐயர்செட் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று பழனி மின்சார வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

வடமதுரை

வடமதுரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடப்பதால் வடமதுரை, புத்தூர், போஜனம்பட்டி, காணப்பாடி, வேலாயுதம்பாளையம், மோர்பட்டி, ஆலம்பட்டி, சடையம்பட்டி, தென்னம்பட்டி, பிலாத்து, அழகர்நாயக்கன்பட்டி, வெள்ளபொம்மன்பட்டி, ஊராளிபட்டி, தும்மக்குண்டு, சீத்தப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்