பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2022-06-03 17:48 GMT

வேலூர்

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார், மண்டல தலைவர் நரேந்திரன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பையை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும் மஞ்சப்பை வழங்கி பிளாஸ்டிக் பையை பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதைத்தொடர்ந்து பழைய பஸ் நிலையம் முழுவதும் 120 தூய்மை பணியாளர்கள் மேற்கொண்ட ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், உதவி கமிஷனர் வசந்தி, இளநிலை பொறியாளர் மதிவாணன், சுகாதார ஆய்வாளர் லூர்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்