பண்ருட்டி அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் வாலிபர் கைது
பண்ருட்டி அருகே பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே உள்ள ஒதியடிக்குப்பத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன் மகன் தனுஷ்(வயது 21). சம்பவத்தன்று இவர் பிளஸ்-2 படித்து வரும் மாணவி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவரது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து அந்த மாணவி தனது தாயாரிடம் கூறி அழுதார். இதையடுத்து அவரது தாயார் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.