பா.ம.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

இடங்கணசாலை நகராட்சி கூட்டத்தில் பா.ம.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.;

Update:2022-07-01 01:29 IST

இளம்பிள்ளை:

இடங்கணசாலை நகராட்சி கூட்டம் நேற்று அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் நித்தியா, துணைத்தலைவர் தளபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், குறைகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பா.ம.க. மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள் நகராட்சியின் செலவினங்களுக்கான கணக்குகளை கேட்டு, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்