விஷம் குடித்த காய்கறி வியாபாரி சாவு
காவேரிப்பாக்கத்தில் விஷம் குடித்த காய்கறி வியாபாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.;
காவேரிப்பாக்கம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 67). சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக இவருக்கு குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த கோவிந்தன் கடந்த 5-ந்் தேதி விஷம் குடித்துள்ளார்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தநிலையில் நேற்று கோவிந்தன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.