மாரண்டஅள்ளியில்குற்றச்சம்பவங்களை தடுக்க 26 கண்காணிப்பு கேமராக்கள்போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தொடங்கி வைத்தார்

Update:2022-12-27 00:15 IST

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசல்களையும் கட்டுப்படுத்தவும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாரண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்த செல்வம், வெற்றி, சரவணன், ராஜா, ஆகியோர் உதவியுடன் நகரின் முக்கிய பகுதிகளான பஸ் நிலையம், 4 ரோடு, பழைய பஸ் நிலையம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மொத்தம் 26 கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதையடுத்து நேற்று அதனை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்து, மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன், பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், செயல் அலுவலர் சித்திரை கனி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்