பட்டவர்த்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பட்டவர்த்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2022-12-05 18:45 GMT

மணல்மேடு அருகே பட்டவர்த்தி கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே கடந்த ஆண்டு அம்பேத்கர் நினைவு நாளில் அவருடைய உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியபோது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அங்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் 300 போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்