பாலிடெக்னிக் மாணவர் போக்சோவில் கைது

பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாலிடெக்னிக் மாணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-05-25 21:09 IST

திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி, தேர்வு எழுத சென்றபோது மாயமாகி விட்டதாக அவரது பெற்றோர் திண்டுக்கல் வடக்கு போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திண்டுக்கல்லில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் அந்த மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் மாணவியையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்