திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பூச்சாற்று உற்சவம்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பூச்சாற்று உற்சவம் நடைபெற்றது.;
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி, ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் ஸ்ரீதேகளீச பெருமாள் சாமிக்கு வசந்த உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 3-ந்தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு ஸ்ரீ புஷ்பவல்லி தாயாருக்கு பூச்சாற்று உற்சவம் நடைபெற்றது. 3 நாட்களும் மாலை 4 மணிக்கு ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் புறப்பாடாகி ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.
மேலும் தினசரி மாலை 6 மணி முதல் 7 மணி வரை வேதபாராயணமும், 8 மணி முதல் 9 மணி வரை சாற்று மறை நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகி கோலாகலன் என்கிற கிருஷ்ணன் மேற்பார்வையில் விழா குழுவினர்கள், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.