ராமேசுவரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
ராமேசுவரம் பகுதியில் நாளை மின் வினியோகம் இருக்காது.;
ராமேசுவரம்,
ராமேசுவரம் தங்கச்சிமடம் பகுதியில் சிறப்பு பராமரிப்பு பணி நடைபெறுவதை தொடர்ந்து நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ராமேசுவரம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் தங்கச்சிமடம் பகுதியிலும் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்தார்.