விவசாயிகளுக்கு இலவச பயிற்சி

Update: 2023-05-24 06:15 GMT

தர்மபுரி:

கால்நடை மருத்துவ பல்கலைக்கழக தர்மபுரி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் கண்ணதாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கறவை மாடுகள் கோடை காலத்தில் நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக பால் உற்பத்தி குறைவு, சினை பிடித்தலில் சிரமம், அதிக அளவில் மூச்சிரைப்பு, வெப்ப அயற்சி உள்ளிட்ட பல்வேறு கோளாறுகளுக்கு ஆளாகின்றன. கறவை மாடு வளர்க்கு விவசாயிகள் தங்கள் மாடுகளை கோடைகாலத்தில் முறையாக மேலாண்மை செய்து கறவை மாடுகளின் நலனையும், உற்பத்தியையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் தர்மபுரி குண்டலபட்டி கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இலவச பயிற்சி முகாம் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

இந்த பயிற்சியில் கோடை காலங்களில் கறவை மாடு வளர்ப்பு விவசாயிகள் பின்பற்ற வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட கொட்டகை பராமரிப்பு, தீவனம் மற்றும் நீர் அளித்தல், நோய் மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை உள்ளிட்ட வழிமுறைகள் குறித்து விளக்க படங்கள் மற்றும் செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பல்கலைக்கழகத்தின் பல்வேறு மையங்களில் இருந்து வரும் நிபுணத்துவம் வாய்ந்த பேராசிரியர்கள் கறவை மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். ஆர்வமுள்ள விவசாயிகள் இந்த இலவச பயிற்சியில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்