சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாருக்கு சாகும் வரை சிறை

ஆலயத்துக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

Update: 2023-04-20 18:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஆலயத்துக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

பாலியல் தொல்லை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ஜோசப் ராஜ்(வயது 49). இவர் கடந்த 3.5.2022-ல் ஆலயத்துக்கு வந்த 17 வயதுள்ள மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோசப்ராஜை கைது செய்தனர்.

சாகும் வரை சிறை

மேலும் இதுதொடர்பான வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து, பாதிரியார் ஜோசப் ராஜூவுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

------------

Tags:    

மேலும் செய்திகள்