நெல்லையில் 1.1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: 2 பேர் கைது

மேலப்பாளையம், வீரமாணிக்கபுரம் பேருந்து நிலையம் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிசங்கர் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.;

Update:2026-01-23 21:50 IST

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரமாணிக்கபுரம் பேருந்து நிலையம் அருகில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிசங்கர் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த வீரமாணிக்கபுரம், குறிச்சி பகுதியை சேர்ந்த சங்கரபாண்டி மகன் கணேஷ்குமார் (வயது 20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான பாபநாசம் மகன் ரமேஷ்(44) ஆகியோரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் அவர்கள் விற்பனைக்கு அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 1 கிலோ 100 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கஞ்சா மற்றும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்