நெல்லையில் சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது

நெல்லை புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் ரோந்து பணிக்கு சென்றனர்.;

Update:2026-01-23 21:45 IST

திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பகுதியில் நேற்று மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் காவல்துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அங்கே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கங்கைகொண்டானை சேர்ந்த கருப்பையா மகன் ரஞ்சித்குமார் (வயது 46) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்