கூட்டணி ஆட்சி விவகாரத்தில் ராகுல் காந்தி கார்கே, முடிவை ஏற்றுக் கொள்வோம்: மாணிக்கம் தாகூர்
விஜய்யை ஏற்பது பற்றி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.;
விருதுநகர்,
விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பிரதமர் மோடி தேர்தல் வரும்போதெல்லாம் தமிழகத்துக்கு வந்து விடுவார். 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்சுக்கு முதற்கட்ட கட்டுமானப்பணி முடியவே இன்னும் 2 மாதமாகும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை இரவு பகலாக உழைத்து டி.டி.வி. தினகரன், அன்புமணி ஆகியோரை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளன. த.வெ.க.வுக்கு விசில் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. விஜய்யை ஏற்பது பற்றி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
கூட்டணி ஆட்சியை பொறுத்தவரை காங்கிரஸ் தேசிய தலைவர்கள் ராகுல் காந்தி, கார்கே, பொதுச் செயலாளர் வேணுகோபால், தமிழக பொறுப்பாளர் உள்ளிட்டோரிடம் எங்கள் கருத்தை சொல்லி விட்டோம். கூட்டணி ஆட்சி விவகாரத்தில் ராகுல் காந்தி கார்கே, முடிவை ஏற்றுக் கொள்வோம். அவர்கள் மீது நம்பிக்கை உள்ளது. அவர்களிடம் கூறியது பற்றி பொதுவெளியில் சொல்ல முடியாது. கவர்னரின் செயல்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.