காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கர்நாடக அரசை கண்டித்து மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2023-10-16 18:45 GMT

மன்னார்குடி:

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மன்னார்குடி பெரியார் சிலை எதிரே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக்குழு நிர்வாகி மன்னை ராஜசேகரன் தலைமை தாங்கினார். முன்னதாக நிர்வாகி நிரஞ்சன் வரவேற்று பேசினார். இதில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பாரதிசெல்வன், காவிரி உரிமை மீட்புக்குழு நிர்வாகி கலைச்செல்வம், நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி ராம.அரவிந்தன், நகரதலைவர் சவுந்திரராஜன், வணிகர் நலச்சங்க நிர்வாகி தாரகை.செல்வகுமார், தமிழர் தேசியக்களம் சார்பில் முகமது பைசல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தண்ணீர் இன்றி பாதித்த குறுவை பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் கர்நாடக மாநிலத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும். நெய்வேலி மற்றும் கூடங்குளம் பகுதிகளிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு மின்சாரம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்