குடிநீர் தொட்டியை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

சங்கரன்கோவிலில் குடிநீர் தொட்டியை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தொிவித்தனர்;

Update:2023-06-26 01:08 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில்- கழுகுமலை மெயின் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சங்கரன்கோவில்- கழுகுமலை மெயின் ரோட்டில் உள்ள குடிநீர் தொட்டியை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றுவதற்கு வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி கவுன்சிலர் ஷேக் முகமது தலைமையில், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை விரிவாக்க பணிகள் முடிந்ததும் மீண்டும் குடிநீர் தொட்டி அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்