பொதுமக்கள் சாலை மறியல்

தேவதானப்பட்டி அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்.

Update: 2022-11-03 18:45 GMT

தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலத்தில் உள்ள முத்தையா கோவில் திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. நேற்று கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. அப்போது ஒரு தரப்பினர் எங்களுக்கு ெதரியாமல் உண்டியலை எண்ணக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த ஜெயமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது யாஹ்யா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர், ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அந்த தரப்பினர் மேல்மங்கலத்தில் பெரியகுளம்-வைகை அணை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்