பழனி அருகே தோட்டத்துக்குள் புகுந்த மலைப்பாம்பு

பழனி அருகே தோட்டத்துக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது.;

Update:2022-12-18 22:23 IST

பழனி அருகே உள்ள அய்யம்புள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சாதிக் பாட்சா. விவசாயி. இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு அப்பகுதியில் உள்ளது. நேற்று வழக்கம்போல் தனது தென்னந்தோப்புக்கு சாதிக்பாட்சா சென்றார். அப்போது அங்கு மலைப்பாம்பு ஒன்று சுருண்டு கிடந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள், தோட்டத்தில் கிடந்த 7 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதை பழனி வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள், கொடைக்கானல் செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில் கொண்டுபோய் மலைப்பாம்பை விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்