வெறிநோய் தடுப்பூசி முகாம்

கரிவலம்வந்தநல்லூர் கிராமத்தில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2023-03-10 18:45 GMT

சங்கரன்கோவில்:

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை தென்காசி மாவட்டம் மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2021-22-ன் கீழ் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் கரிவலம்வந்தநல்லூர் கிராமத்தில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நெல்லை கோட்ட உதவி இயக்குனர் கலையரசி, சங்கரன்கோவில் கால்நடை மருத்துவமனை உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, வார்டு உறுப்பினர்கள் மகாலிங்கம், முத்துமாரி ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். கால்நடை உதவி மருத்துவர்கள் சசிதரன், வசந்தா, சந்திரலேகா, மகிழன், சிமியோன், சர்மதி, கலைக்கோவன், கால்நடை ஆய்வாளர் பேச்சியம்மாள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கோமதிநாயகம், அனிதா, முத்துமாரியப்பன், மனோன்மணி ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் தடுப்பூசி பணியை மேற்கொண்டனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும் வெறிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் கரிவலம்வந்தநல்லூர் ஆ.ம.செ. அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் தலைமை ஆசிரியர் குமரேசன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை கரிவலம்வந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்