தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. பின்னர் மாலையில் தர்மபுரி நகர பகுதியில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. 30 நிமிடங்கள் இந்த மழை நீடித்தது. இதனால் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தது. இரவு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. தர்மபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.