இளையான்குடி,
இளையான்குடியில் மாலை 6 மணி முதல் 7 மணிக்கு மேலும் கனமழை நீடித்து பெய்தது. கனமழையால் இளையான்குடி நகர் பகுதி முழுவதும் சாலைகளில் வெள்ளக்காடாக காட்சியளித்தது. அரசு பணி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் மழையிலிருந்து தங்கள் இல்லத்திற்கு செல்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டனர். தொடர்ந்து இடி மின்னலுடன் மழை பெய்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் இளையான்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மக்கள் அவதிப்பட்டனர்.