இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்

உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Update: 2023-11-07 05:19 GMT

ராமநாதபுரம்,

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 14 மற்றும் 28 ஆம் தேதிகளில் மீன் பிடிக்க சென்ற 64 மீனவர்கள் மற்றும் 10 விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை இலங்கை வசம் உள்ள 132 படகுகளை மீட்டு கொடுக்க வேண்டும், இலங்கை கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட படகுகளுக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் நேற்று மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் 2-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் மீனவர்களுடன் அவர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

 

Tags:    

மேலும் செய்திகள்