ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-09-14 00:30 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியில் 22 மூட்டைகளில் 770 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் சங்கரன்கோவில் பாரதி நகர் 3-வது தெருவை சேர்ந்த கண்ணன் (22) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரேஷன் அரிசி, மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக சங்கரன்கோவில் ராமநாதபுரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் குட்டியான் என்ற செல்லையா, உதவியாளர் கே.ரெட்டியாபட்டியை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் ஆலை உரிமையாளர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்