ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு

உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை அருந்ததியர் சமுதாய மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-12-20 00:30 IST

உத்தமபாளையம் அருகே நாகையகவுண்டன்பட்டி கிழக்கு காலனியில் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு சொந்தமான இடம் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறி, அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று, அந்த இடத்தை முறையாக அளவீடு செய்து பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை அந்த சமுதாய மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்க போவதாக கூறி கோஷமிட்டனர். தொடர்ந்து அலுவலகம் முன்பு அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த ஆர்.டி.ஓ. பால்பாண்டியன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அந்த சமுதாய மக்கள் தங்கள் இடத்திற்கு முறையான ஆவணங்களை வழங்கினால் உடனே பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் ேபாராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்