இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.2½ கோடி நிலம் மீட்பு

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.2½ கோடி நிலம் மீட்கப்பட்டது.;

Update:2023-04-04 00:11 IST

சமயபுரம் அருகே இருங்களூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருங்களூர் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர், 87 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமணன் உத்தரவின்படி, அறநிலையத்துறை தனி தாசில்தார் கருணாகரன் தலைமையில் நில அளவையர்கள் சிவக்குமார், ரஞ்சித்குமார், சுரேஷ்குமார் மற்றும் கோவில் செயல் அலுவலர் அனுராதா ஆகியோர் நேற்று அந்த நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டனர். மேலும் அந்த இடத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்ற பதாகையும் அதிகாரிகள் நட்டு வைத்தனர். ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடியே 51 லட்சம் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்