கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

கடலூரில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.

Update: 2023-01-24 18:42 GMT

கூட்டுறவுத்துறையில் பணிபுரியும் சார்நிலை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி கடலூரில் நேற்று தொடங்கியது. இப்பயிற்சியை மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்ட மத்திய கூட்டுவு வஙகியின் மேலாண்மை இயக்குனர் திலீப்குமார் வாழ்த்துரை வழங்கினார். துணைப்பதிவாளர் அன்பரசு வரவேற்றார். சரக துணைப்பதிவாளர்கள் கடலூர் துரைசாமி, விருத்தாசலம் ஜீவானந்தம், சிதம்பரம் சண்முகம், விருத்தாசலம் கூட்டுறவு நகர வங்கியின் மேலாண்மை இயக்குனர் சீனிவாசன், பொது வினியோகத்திட்ட துணை பதிவாளர் ராஜேந்திரன், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் எழில்பாரதி, டான்பெட் துணைப்பதிவாளர் வைரமணி, இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் ராஜன், சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பொது வினியோக திட்டம், நிதி மற்றும் வங்கியியல், அரசின் சிறப்பு திட்டங்கள், சட்டப்பூர்வ பணிகள், விற்பனை மற்றும் நுகர்வோர் கூட்டுறவு, தகவல் அறியும் உரிமை சட்டம், யோகா, தமிழ் ஆட்சி மொழி திட்ட செயலாக்கம் உள்ளிட்ட பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் கூட்டுறவு, வீட்டுவசதி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் ஆகிய துறைகளில் இருந்து சார்நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி இன்றும்(புதன்கிழமை) நடக்கிறது

Tags:    

மேலும் செய்திகள்