மயானத்துக்கு வழிகேட்டு இறந்தவரை அடக்கம் செய்ய மறுப்பு

அரூரில் மயானத்துக்கு வழிகேட்டு இறந்தவரை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-27 19:30 GMT

அரூர்:-

அரூரில் மயானத்துக்கு வழிகேட்டு இறந்தவரை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயான பாதை

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கெளாப்பாறையை சேர்ந்த சக்கு (வயது 61) என்பவர் நேற்று இறந்தார். இந்நிலையில், மயானத்திற்கு செல்லும் பாதையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கம்பி வேலி அமைத்துள்ளார். இதனால், சக்குவின் உடலை அடக்கம் செய்வதற்கு மயானத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, மயானத்திற்கு பாதை வசதி கோரி அப்பகுதி மக்கள் அரூர்கீரைப்பட்டி சாலையில் கெளாப்பாறை பஸ் நிறுத்தத்தில் மதியம் 2.30 மணி முதல் 3.15 மணி வரை சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இரவு வரை நீடித்தது

மேலும், சக்குவின் உடலை அவரது வீட்டின் அருகில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், தாசில்தார் பெருமாள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், சமாதானம் ஏற்படாத நிலையில், இரவு 7.30 மணிக்கு மேலாகியும் சக்குவின் உடல் அடக்கம் செய்யப்படவில்லை. அவர்களது போராட்டம் இரவு வரை நீடித்தது. அவர்களிடம் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்