பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

Update: 2023-09-22 18:45 GMT

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே அருண்மொழிதேவன் கிராம பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுவதால் அது எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலை உள்ளது. எனவே சேதமடைந்த நிழற்குடையை இடித்து விட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து புதிய நிழற்குடை கட்டுவதற்காக ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சரளா கண்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் சேதம் அடைந்த நிழற்குடையை இடித்து அகற்றியதோடு, அதையொட்டி இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் நடைபெற்றது. அப்போது அதன் அருகே கட்டப்பட்டிருந்த ராஜேந்திரன் என்பவரின் குடிசை வீட்டை அகற்ற முயன்றபோது, அவர் வீட்டை காலி செய்ய கால அவகாசம் கேட்டார். இதையடுத்து அந்த வீட்டை தவிர மற்ற ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்