காந்திபுரம் லஜபதிராய் வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
காந்திபுரம் லஜபதிராய் வீதியில் ஆக்கிரமிப்பை சுகாதார பணியாளர்கள் இடித்து அகற்றினர்.;
கோவை காந்திபுரம் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது.
இதில் லஜபதிராய் வீதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகளின் படிக்கட்டு, சாய்வுதளம் போன்றவை அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
எனவே மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின் பேரில் அந்த வீதியில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. உதவி நகரமைப்பு அதிகாரி பாபு தலைமையில், உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், சுகாதார பணியாளர்கள் நேற்று லஜபதிராய் வீதியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த பெட்டிக்கடை, மொபைல் கடை, ஜெராக்ஸ் கடை, ஓட்டல், கடைகளின் பெயர் பலகை, சாய்வுதளம், படிக்கட்டு உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர்.