மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்த மரங்கள் அகற்றம்

மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டது.

Update: 2022-11-17 19:06 GMT

அரியலூர் வாலாஜா நகரம் பகுதியில் புளிய மரங்கள் உடைந்து உள்ளதாகவும், மின்கம்பிகளை உரசி கொண்டு உள்ளதாகவும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பன்னீர்செல்வம் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த கலெக்டர் ரமண சரஸ்வதி உடனே நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன் ஆகியோரிடம் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இருந்த சுமார் 150 ஆண்டுகள் பழமையான புளிய மரங்களை வெட்டும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ள மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்