வனவிலங்குகளின் ஓவியங்களுடன் புதுப்பொலிவு பெற்ற கழிப்பிடங்கள்

கோத்தகிரி நகரில் வனவிலங்குகளின் தத்ரூப ஓவியங்களுடன் கழிப்பிடங்கள் புதுப்பொலிவு பெற்றன. பேரூராட்சியின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.;

Update:2022-05-26 17:06 IST

கோத்தகிரி

கோத்தகிரி நகரில் வனவிலங்குகளின் தத்ரூப ஓவியங்களுடன் கழிப்பிடங்கள் புதுப்பொலிவு பெற்றன. பேரூராட்சியின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

சுவர்களில் ஓவியங்கள்

கோத்தகிரி பேரூராட்சி சார்பில் நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில் 10 பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டு, தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த கழிப்பிடங்களை பொலிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதாவது கழிப்பிட சுவர்களில் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்படுகிறது.

குறிப்பாக நேரு பூங்கா அருகில், மார்க்கெட் மாதா கோவில் சாலை, டானிங்டன், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கழிப்பிட சுவர்களில் பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் ஓவியங்கள் மிகவும் தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளது.

பாராட்டு

இந்த ஓவியங்கள் பார்ப்போரை கவரும் வகையில் அமைந்து உள்ளது. மேலும் கழிப்பிடம் நவீனப்படுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுவாக கழிப்பிடங்கள் என்றாலே, முகம் சுழிக்க வைக்கும் என்ற எண்ணத்தை மாற்றி கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் புதுப்பொலிவாக்கபபட்டு உள்ளதால், அவற்றை பொதுமக்கள் தயக்கமின்றி பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அந்த முயற்சியை மேற்கொண்ட பேரூராட்சி நிர்வாகத்துக்கு, பாராட்டு தெரிவித்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்