சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி புதுப்பிப்பு - கிருத்திகா உதயநிதி திறந்து வைத்தார்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் புதுப்பிக்கப்பட்டுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை கிருத்திகா உதயநிதி திறந்து வைத்தார்.

Update: 2022-06-16 01:57 GMT

ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு ஆற்றல் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் பணியை தொடங்கியது. நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் மற்றும் சென்னை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளை இந்த அமைப்பு மேம்படுத்தி வருகிறது.

இதுவரை 49 பள்ளிகளில் வகுப்பறைகள், கழிவறைகள், ஆய்வுக்கூடங்கள், சத்துணவு மையங்கள் போன்றவற்றை புதுப்பித்து வழங்கி இருக்கிறது. 50-வது பள்ளியாக சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை தேர்வு செய்து, அதனை புதுப்பிக்கும் பணியை தொடங்கியது. அதன்படி, பள்ளியின் 15 வகுப்பறை கட்டிடங்கள், சத்துணவுக்கூடம், மாணவ-மாணவிகள் உணவு உட்கொள்ளும் இடம், கழிவறை ஆகியவற்றை ஆற்றல் அறக்கட்டளை புதுப்பித்து, பயன்பாட்டுக்கு ஒப்படைத்து இருக்கிறது. மேம்படுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட இந்த உயர்நிலைப் பள்ளியை ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் அசோக் குமார் தலைமையில், கிருத்திகா உதயநிதி திறந்து வைத்தார். பின்னர், அவர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்