கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்;

Update:2023-04-30 00:15 IST

இளையான்குடி

இளையான்குடியில் பொதுப்பணித்துறைக்கு பாத்தியப்பட்ட பெரிய கண்மாய் உள்ளது. வைகை தண்ணீர் பாய்ந்து கண்மாய் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இளையான்குடி, இடையவலசை, இந்திராநகர், கொங்கம்பட்டி, சீத்தூரணி போன்ற கிராம விவசாயிகள் இந்த கண்மாய் நீரை பயன்படுத்தி பாசன வசதி பெற்றனர். இளையான்குடி சமூக ஆர்வலர்கள் கீழாயூரிலிருந்து இந்திரா நகர், இளையான்குடி கல்லூரி வரை கண்மாய் கரைகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தனர். அவ்வாறு பராமரிக்கப்பட்டு வரும் பலன் தரும் மரங்களை வளர விடாமல் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து பசுமை காடுகள் மரங்கள் வளர விடாமல் தடையாக இருந்து வருகிறது.

எனவே, கண்மாய் கரை பகுதிகளிலும், நீர் பிடிப்பு பகுதிகளிலும் அதிக அளவில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்