சென்னை-செங்கோட்டை சிலம்பு ரெயிலை தினமும் இயக்க கோரிக்கை

சென்னை-செங்கோட்டை சிலம்பு ரெயிலை தினமும் இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.;

Update:2023-02-03 00:15 IST

செங்கோட்டை:

செங்கோட்டை ரெயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் செயலாளர் எச்.கிருஷ்ணன் தெற்கு ரெயில்வே தலைமை அதிகாரிகளுக்கும், மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

வாரத்தில் 3 நாட்கள் சென்னை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் சிலம்பு ரெயிலை தினமும் இயக்க வேண்டும். செங்கோட்டை-மயிலாடுதுறை-செங்கோட்டை ரெயில்களில் பெட்டிகளை அதிகரிக்க வேண்டு்ம். எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் (வழி கொல்லம், புனலூர், செங்கோட்டை, தென்காசி), நெல்லை-தாம்பரம்-நெல்லை (வழி தென்காசி), நெல்லை-மேட்டுப்பாளையம்-நெல்லை (வழி தென்காசி) ஆகிய சிறப்பு ரெயில்களை நிரந்தரமான தினசரி ரெயில்களாக இயக்க வேண்டும்.

தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் விரைவு ரெயிலை விரைவில் இயக்க வேண்டும். அனைத்து நாட்களிலும் சென்னை-செங்கோட்டை-சென்னை பொதிகை விரைவு ரெயில்களில் முன்பதிவில்லாத இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகளை இணைக்க வேண்டும். சிவகாசியில் சென்னை-கொல்லம் விரைவு ரெயில் (எண்:16101) தற்போது நிற்பது கிடையாது. அந்த ரெயிலுக்கு சிவகாசியில் நிறுத்தம் வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்