தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்த பக்தர் மீட்பு

காரையாறு தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்த பக்தர் மீட்கப்பட்டார்.;

Update:2023-08-19 00:56 IST

விக்கிரமசிங்கபுரம்:

காரையாறு சொரிமுத்து அய்யனார் ேகாவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் மணிகண்டன் (வயது 25) என்ற பக்தர் சொரிமுத்து அய்யனார் கோவில் தாமிரபரணி ஆற்றின் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக தடுமாறி ஆற்றில் விழுந்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக ஆற்றில் விழுந்த நபரை துரிதமாக செயல்பட்டு மீட்டனர். தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டர். 

Tags:    

மேலும் செய்திகள்