முள்வேலியில் சிக்கிய புள்ளிமான் மீட்பு
முள்வேலியில் சிக்கிய புள்ளிமான் மீட்கப்பட்டது.;
தொண்டி,
திருவாடானை தாலுகா குருந்தங்குடி கிராமத்தில் இரை தேடி புள்ளி மான் ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மான் அங்குள்ள முள்வேலியில் சிக்கி கொண்டது. இதில் மானுக்கு வாய் மற்றும் தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி கிடந்த புள்ளிமானை கண்ட கிராம மக்கள் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கால்நடைத்துறை கம்பவுண்டர் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த மானுக்கு சிகிச்சை அளித்தார். வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தும் அலுவலர்கள் யாரும் வராததால் காயம் அடைந்த மானை பொதுமக்கள் பாதுகாத்தனர்.