தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.;

Update:2023-09-17 00:38 IST

அரியலூர் மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் எதிர்புறம் உள்ள கழிவுநீர் வடிகாலில் நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் குடியிருப்பவர்களும், அந்த வழியாக கடந்து செல்வோரும் கடும் துர்நாற்றத்தால் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இதன் காரணமாக கொசு உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. இதன்மூலம் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே தூர்ந்து போன கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சுத்தப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்