ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை

ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2023-03-03 19:45 GMT

பாலியல் துன்புறுத்தல்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா வ.கீரனூரை சேர்ந்தவர் மணி(வயது 82). இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் குன்னம் போலீஸ்நிலையத்தில் மணி மீது புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர்.

20 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுந்தர்ராஜன் ஆஜரானார்.இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று நீதிபதி முத்துகுமாரவேல் தீர்ப்பு கூறினார். அதில், மணிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மணியை போலீசார் திருச்சிக்கு அழைத்து சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்