மரத்துண்டுகளால் விபத்து அபாயம்

ஊட்டி அரசு ஆஸ்பத்திரி சாலையில் கிடக்கும் மரத்துண்டுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-08-27 21:30 GMT

ஊட்டி

ஊட்டி அரசு ஆஸ்பத்திரி சாலையில் கிடக்கும் மரத்துண்டுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சாலையில் மரத்துண்டுகள்

ஊட்டி அரசு ஆஸ்பத்திரி சாலையில் ஆபத்தான மரங்கள் இருந்தன. அருகில் குடியிருப்பு பகுதிகள் இருப்பதாலும், மருத்துவமனை இருப்பதாலும் வருவாய்த்துறை மூலம் அந்த மரங்கள் வெட்டப்பட்டது. ஆனால், அந்த மரத்துண்டுகள் சாலையோரம் அப்படியே போடப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

ஊட்டி அரசு ஆஸ்பத்திரி சாலையில் ஆபத்தான மரங்கள் இருந்தன. அந்த மரங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெட்டப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால், வெட்டப்பட்ட மரத்துண்டுகளை அகற்றாமல் அங்கேயே போட்டு உள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி சாலை வழியாக பஸ் நிலையம் செல்லும் வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள சென்று வருகின்றன.

விபத்து அபாயம்

இதனால் குறிப்பிட்ட பகுதியில் மரத்துண்டுகள் கிடக்கும் இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் ஆம்புலன்ஸ்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. மேலும் இரவு நேரத்தில் அந்த சாலையை ஒட்டி மரத்துண்டுகள் கிடப்பது தெரியாமல் சிலர் அதில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

எனவே, போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்தை ஏற்படுத்தும் மரத்துண்டுகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்