வாகனம் மோதி மூதாட்டி சாவு

பட்டுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி இறந்தாா்.;

Update:2022-12-24 02:00 IST

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டையை அடுத்த சஞ்சாய நகர் திருமண மண்டபம் அருகில் சாலையோரம் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதிய காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த வீரக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் வினோதா பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் மீது மோதி விட்டு சென்ற வாகனம் எங்கே? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்