சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்

தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2023-06-18 20:15 GMT

ஊட்டிதோடர் இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி உள்ளார்.

தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி உள்ளார்.

ஆய்வு கூட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பள்ளி கல்வித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, உயர்கல்வித்துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை ஆகிய அரசுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. பேசியதாவது:-

சாலை வசதி

மாநில கணக்காயர்கள் கொடுத்த தகவல்களின் படி, நீலகிரி மாவட்டத்தில் பொதுக்கணக்கு குழு உறுப்பினர்களுடன் ஊட்டி டேவிஸ் பூங்கா, உழவர் சந்தை, தெப்பக்காடு, பார்சன்ஸ்வேலி ஆகிய இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு துறை அலுவலர்களுடன் என்னென்ன முடிவுகள் மேற்கொள்ளப்படலாம் என்பது குறித்து ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. சில மந்து (தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி) பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பூர்வகுடி மக்கள் வாழும் பகுதிகளில் சாலை வசதிகளை செய்து தர வேண்டும் என கடந்த ஆண்டு பல்வேறு பரிந்துரைகள் அளித்து இருந்தோம். இதன் மீது மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்கு குழுவின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி., பொதுக்கணக்கு குழுவின் உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், ஈ.ஆர்.ஈஸ்வரன், கிருஷ்ணசாமி, சரஸ்வதி, சேகர், நத்தம் விஸ்வநாதன், மாவட்ட கலெக்டர் அம்ரித், வன அலுவலர் கவுதம், பொது கணக்கு குழு இணைச்செயலாளர் தேன்மொழி, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்